நேதாஜி இளைஞர் மன்றம்

நேதாஜி இளைஞர் மன்றம்

ஊமை வேஷத்தில் நேதாஜி

ஆங்கில அரசு உண்மையில் போஸையும் அவரின் சொல்லாற்றலையும் செயலாற்றலையும் கண்டு பயந்தது. அவர் பலமுறை சிறையில் அடைக்கப் பட்டார். அதில் அநேகம் முறை மாண்டலே சிறையில் நாடு விட்டு நாடு அடைக்கப் பட்டார். காங்கிரஸின் மற்ற தலைவர்களைப் போல் எந்த விதமான செளகரியமும் பெறவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் 1930-ல் ஐரோப்பாவிற்கு நாடு கடத்தப் பட்டு அவர் தந்தை இறந்த போது வைதீகச் சடங்குகளில் மட்டும் கலந்து கொண்டு உடனேயே திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையுடன் கல்கத்தாவில் அனுமதிக்கப்பட்டார். 36 வரை ஐரோப்பாவில் சுற்றி வந்த போஸ் பல தலைவர்களையும் சந்தித்துப் பேசி ஆதரவு திரட்டினார். ஆங்கில அரசு அவர் இறந்து விட்டார் என்று அவதூறு கிளப்பியும் அவர் ஜெர்மனியில் இருந்து அந்நாட்டு அரசு உதவியுடன் ரேடியோவில் பேசித் தான் உயிருடன் இருப்பதைத் தெரியப் படுத்தினார். "நான் சுபாஷ் சந்திர போஸ்! இன்னும்  உயிருடன்தான் இருக்கிறேன்." என்று ஆரம்பித்து அவர் பேசிய பேச்சு சரித்திரப் பிரசித்தி பெற்றது. இதற்குப் பின்னர் தான் காங்கிரஸில் இருந்து விலகி, "அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் கட்சி"யை ஆரம்பிக்கிறார். இதை ரவீந்திரநாத் தாகூர் மஹாஜதி சதனில் அடிக்கல் நாட்டித் துவக்கி வைக்கிறார்.

கட்சி ஆரம்பித்தாலும் தன்னுடைய கொள்கைகளைக் கைவிடாமல் ஆங்கில அரசு 6 மாதத்துக்குள் நாட்டிற்கு நிபந்தனை அற்ற சுதந்திரம் கொடுக்க வேண்டும் எனவும், நாடு முழுதும் ஒத்துழையாமை இயக்கம் நடக்கும் எனவும் அறிவித்தார். அப்போது 2-ம் உலக மஹா யுத்தம் ஆரம்பிச்சு நடந்து கொண்டிருந்த சமயம். போஸ் இந்தச் சமயம் தான் நாம் சுதந்திரம் பெறச் சரியான தருணம் என்று நினைத்ததோடு அல்லாமல், ஒரு நாடு சுதந்திர நாடாக இருக்க அது தனக்கென்று தனிப்படை, நீதிமன்றங்கள், விதிமுறைகள், சட்டங்கள், தொழில்துறைகள், பணவசதி எல்லாம் பெற்றிருக்கவேண்டும் என்றும் நினைத்தார். அதற்காகவே காங்கிரஸில் செயல் படுத்த முடியாத National Planning Committee-ஐ மீண்டும் அறிமுகம் செய்தார். குறைந்தது நாடு சுதந்திரம் அடைந்து 20 வருடங்களுக்காவது Socialist Authoritarianism இருக்க வேண்டும் என்றும் நினைத்தார். உலகப் போர் அறிவிக்கப் பட்டதும் காங்கிரஸ் கட்சி ஆட்சியாளர்களுக்குத் துணையாக ஒத்துழைக்க நினைக்க போஸோ ஒத்துழையாமை இயக்கம் நடத்த நினைத்தார். காந்தி அதை ஆதரிக்கவில்லை. பிரிட்டஷார் பலவீனம் அடைந்திருந்த இந்தச் சமயம்தான் நமக்குச் சரியான சமயம் என்பது போஸின் கருத்து. ஆனால் காந்தி அதைத் திட்டவட்டமாய் நிராகரித்தார். போஸ் கல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டம் நடத்திக் குறைந்த பட்சம் கல்கத்தா டல்ஹெளசி ஸ்கொயரில் இருந்த " Holwell Monument"-ஐ எடுக்கச் சொல்லிப் போராட்டம் நடத்தினார். ஆங்கில அரசு அவரைக் கைது செய்து அலிப்பூர் ஜெயிலில் அடைத்தது. 7 நாட்கள் போஸ் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். அரசு அவரை விடுதலை செய்தது என்றாலும் கல்கத்தா வீட்டில் வீட்டுச் சிறை வைத்தது. இடைவிடாமல் கண்காணிப்புச் செய்தது. நாட்டையும், வீட்டையும், கல்கத்தாவையும் விட்டு வெளியில் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. ஆனால் போஸ் அங்கிருந்து தப்பிச் செல்ல முடிவு செய்தார். தப்பியும் சென்றார் மிகவும் சாமர்த்தியமாய்!


ஜெர்மனிக்குத் தப்பிச் செல்ல முடிவு செய்த போஸ் என்ன செய்யவேண்டும் எனத் திட்டம் போட்டுக் கொண்டார். ஆப்கனில் அப்போது வடமேற்குப் பிராந்திய எல்லையில் இருந்த அப்போதைய ஃபார்வர்டு ப்ளாக் கட்சித் தலைவர் ஆன மியான் அக்பர்ஷா உதவியுடன் தப்ப முடிவு செய்தார். இந்தியாவில், கல்கத்தாவில் இருந்த தன்னுடைய வீட்டில் இருந்து தன்னுடைய மருமகன் சிசிர் கே. போஸின் உதவியுடன் முஸ்லீம் மதகுருவின் வேஷம் தரித்துப் பெஷாவரை வந்தடைந்தார். பெஷாவர் கன்டோன்மென்டில் அக்பர் ஷா, மொஹம்மத் ஷா, பகத்ராம் தல்வார் உதவியுடன் அவர்கள் நண்பர்களுடன் தங்கி இருந்து அங்கே இருந்து செவிட்டு, ஊமை வேஷத்தில் தப்ப முடிவு. ஏனெனில் இம்முறை ஒரு பதானைப் போல் வேஷம் தரித்திருந்த போஸுக்கு உள்நாட்டு மொழி தெரியாது. வழியில் சோதனை செய்யும்போது உள்நாட்டு மொழி தெரியாமல் மாட்டிக் கொள்ள நேரிடுமே. ஆகையால் அக்பர் ஷாவின் ஆலோசனைப்படி செவிட்டு ஊமை வேஷத்தில் ஆப்கன் எல்லையைக் கடந்து ரஷியாவுக்குள் நுழைந்தார். எல்லையைக் கடக்க அவருக்கு உதவியது ஆகா கானின் ஆட்கள். ர்ஷியாவின் ஆங்கிலேய எதிர்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த போஸிற்கு ர்ஷிய அரசுக்கு இந்திய சுதந்திரத்தில் அவ்வளவாய் ஆர்வம் இல்லை எனக் கண்டு அங்கிருந்து இத்தாலி போகிறார். அங்கே இருந்து பின் ஜெர்மன் போய் ஹிட்லரைச் சந்திக்கிறார். அனைவரும் ஹிட்லரையும் அவரின் யூத எதிர்ப்பையும் கண்டு
அஞ்சி நடுங்கி இருக்க போஸ் அவரின் இந்தக் கொள்கைகளைப் பகிரங்கமாய்ச்
சாடுகிறார். ஆங்கில அரசுக்கு அவர் ஜெர்மன் செல்வது தெரிந்ததும் அதைத் தடுக்கப் பார்க்கிறது. முடியவில்லை என்றதும் அவரைக் கொலை செய்யுமாறு ஆட்களை நியமனம் செய்கிறது.

ஜெர்மன் செல்லும் வழியில் பலமுறை ஆங்கில அரசு அவரைக் கொலை செய்ய முயற்சி செய்கிறது. இதன் விவரங்கள் சமீபத்தில் வெளிவந்த சில குறிப்புக்களில் இருந்து தெரிய வருகிறது. ஜெர்மனில் இருந்த போஸ் செயதது என்ன?

 போஸ் ஐரோப்பாவில் நாடு கடத்தப் பட்டு இருந்த சமயங்களில் தன் சுதந்திரப் போரைப் பற்றி "The Struggle" என்னும் பெயரில் ஒரு புத்தகம் ஒரு பாகம் எழுதினார். அது லண்டனில் வெளியிடப் பட்டு அனைத்துத் தரப்பினாலும் பாராட்டுப் பெற்றது. லண்டனின் பிரசித்தி பெற்ற Lawrence & Wishart Publishers published the book in January 17 1935. British Press வரவேற்பைப் பெற்றது அந்தப் புத்தகம். ஐரோப்பா முழுதும் வரவேற்புப் பெற்ற அந்தப் புத்தகம் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசால் இந்தியாவில் வெளியிடப் படுவது தடுக்கப் பட்டது. இந்தியாவிற்கான Secretary of State Samuel Hoare, House of Commons-ல் சொன்னார்: மேற்கண்ட புத்தகம் இந்தியாவில் வெளியிடப் பட்டால் இந்தியாவில் வன்முறையும் புரட்சியும் வெடிக்கும். ஆகவே தான் அதை நான் தடை செய்தேன்." என்றார். இந்தியா சுதந்திரம் அடைந்தது, லேபர் கட்சியைச் சேர்ந்த
"அட்லி" பிரதமராய் இருந்தபோது. கன்சர்வேட்டிவ் கட்சி ஒரு போதும் இந்திய சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை

No comments:

Post a Comment

என்னைப்பற்றி